இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான் | India VS Pakistan Worldcup 2019 | Cricket

2019-06-18 34

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதல்
மான்செஸ்டர் நகரில் நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ், பீல்டிங்கை தேர்வு செய்தார்.

துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் அருமையாக ஆடி, முதல் விக்கெட்டுக்கு 136 ரன் சேர்த்தனர்.
ராகுல் 57 ரன்னில் அவுட்டானதும் ரோஹித் கேப்டன் கோஹ்லியுடன்
ஜோடி சேர்ந்து பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
ரோகித் சர்மா 113 பந்துகளில் 140 ரன் எடுத்து அவுட்டானார்.
இது ரோகித்தின் 24வது ஒருநாள் சதம். நடப்பு உலகக் கோப்பையில் 2வது சதம்.
கோஹ்லி 65 பந்தில் 77 ரன் எடுத்தார். இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு
336 ரன் குவித்தது.